சூப்பர் ஸ்டாரை அவமானப்படுத்தியது இந்த தயாரிப்பாளரா? உண்மையை உடைத்த பிரபலம்..

producer superstar rajinikanth
By Edward Sep 21, 2021 04:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகளாக இருக்கையை தக்கவைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு டப்பிங் வேலையில் பிஸியாக இருந்து வருகிறார். ஆரம்பகால சினிமா வாழ்க்கை தான் அவமானப்படுத்தப்பட்டேன் என்று பல மேடைகளில் கூறியிருந்தார்.

அப்போது அந்த செய்தி பெரியளவில் பேசப்பட்டு யாராக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்தது. ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் கூட கொடுக்காமல், அவரை துரத்தி விட்டதாகவும், அந்த கோபத்தில் தான், கோடம்பாக்கம் ரோட்டில் வெளிநாட்டுக் காரில் திமிராக கால் மேல் கால் போட்டு செல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தில் ரஜினி இருந்தாராம்.

அதன் பிறகு இத்தாலி காரை ஒன்று வாங்கி, எந்த தயாரிப்பாளர் அவமானப்படுத்தினாரோ அதே தயாரிப்பாளர் முன் திமிராக சிகரெட் பிடித்தாராம். ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் காலம் நேரமெல்லாம் கைகூட வேண்டும் என்றும் சூப்பர் ஸ்டார் அந்த மேடையில் தெரிவித்துள்ளார்.

அதன் பின், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ரசிகர்கள் யார் அந்த தயாரிப்பாளர் என்று தொடர்ந்து கேட்டு வந்தனர். அந்த தயாரிப்பாளர் யார் என்பதை, அதே படத்தின் இயக்குனரான காரைக்குடி நாராயணன் பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கூறியிருக்கிறார்.