உதயநிதி மனைவியின் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனை.. படமாக்கிய கிருத்திகா உதயநிதி

Udhayanidhi Stalin Kiruthiga Udhayanidhi
By Jai Aug 08, 2022 12:00 PM GMT
Report
330 Shares

நடிகரும் எம் எல் ஏ-வாக பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின் தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் படங்களை வெளியிட்டு வருகிறார். 2013ம் ஆண்டு வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்குனராக அறிமுகமாகினார்.

அதன்பின் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தினை இயக்கினார். தற்போது பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கிய கிருத்திகா ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இயக்குனர் கிருத்திகா அளித்த பேட்டியொன்றில் இப்படம் குடும்பத்தார் இடையே ஏற்படும் சொத்து பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தன் வாழ்க்கையில் சொத்து பிரச்சனை வந்ததாகவும் என் உறவினர்கள் பேசிய பேச்சை எல்லாம் வைத்து தான் பேப்பர் ராக்கெட் படத்தின் காட்சிகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த பிரச்சனை எல்லாம் சரி செய்யப்பட்டு சேர்ந்துவிட்டதாகவும் உதயநிதி மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.