வேறு யாரவது இருந்திருந்தால் தற்கொலைதான்! புலி படம் நஷ்டம் குறித்து பேசிய PT செல்வகுமார்

Vijay
By Kathick Aug 26, 2025 02:30 AM GMT
Report

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புலி. இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதி ஹாசன், கிச்சா சுதீப், ஹன்சிகா என பலரும் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் விஜய்யின் முன்னாள் மேனேஜருமான PT செல்வகுமார் சமீபத்தில் புலி படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

வேறு யாரவது இருந்திருந்தால் தற்கொலைதான்! புலி படம் நஷ்டம் குறித்து பேசிய PT செல்வகுமார் | Pt Selvakumar Talk About Puli Movie Flop And Loss

"புலி படத்தின் ரிலீஸுக்கு ஒரு நாள் முன் Income Tax ரைட். அது ஒரு சூழ்ச்சி. கூட இருந்தவர்களே செய்த சதி. Income Tax ரைட் காரணமாக படம் ரிலீஸ் ஆகாது என செய்தி வந்துவிட்டது. அவர்களுக்கு படம் வெளிவந்தால் என்ன? என்னுடைய நாசமா போனால் என்ன? ஒரு PRO வாழ்க்கை, எனக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. முதல் முறையாக ஆசையோடு பாசத்தோடு ஒரு படம் வாங்கி எப்படியாவது மேல வந்திறலாம் என எவ்வளவு கனவுகளை நான் கண்டு இருப்பேன். என்னுடைய 27 வருட உழைப்பு ஒரே திரைப்படத்தில் சுக்குநூறாக்கப்படுகிறது. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. நான் என்ன பெரிய வீட்டு பிள்ளையா? இல்லை எங்கயாவது கொள்ளையடித்து வைத்திருக்க கூட்டமா?. உழைத்து முன்னேற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் வாழ்பவன்".

வேறு யாரவது இருந்திருந்தால் தற்கொலைதான்! புலி படம் நஷ்டம் குறித்து பேசிய PT செல்வகுமார் | Pt Selvakumar Talk About Puli Movie Flop And Loss

"என்ன சார் படம் ரிலீஸ் ஆகாதுனு சொல்றாங்க, எவண்டா சொன்னான் என் படம் ரிலீஸ் ஆகாதுனு என நான் சொன்னவுடன் அனைவரும் ஆடிப்போய்விட்டனர். என்னுடைய சொத்துக்களை வித்தாவது படத்தை ரிலீஸ் செய்வேன் என்றேன். பல பிரச்சனைகளை கடந்து ரிலீஸ் செய்தேன். படம் அட்டர் பிளாப், ஆமை பேசுதான், தவள பேசுதான், ரசிகர்கள் எல்லாம் ஓடுறாங்க என இப்படியொரு தகவல் வருகிறது. கண்ணீரும் கவலையுமாக இருக்கிறேன். வேறு யாரவது இருந்திருந்தால் கண்டிப்பாக தற்கொலைதான் செய்திருப்பார்கள்" என அவர் கூறியுள்ளார்.