மணிமேகலை கர்ப்பத்தை பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்!! கோபப்பட்ட விஜய் டிவி புகழ்
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருகிறது. அதற்கு காரணம் கோமாளிகளாக இருந்து வருபவர்கள்.
சமையல் போட்டியாக மட்டும் இல்லாமல் காமெடியை கலந்து கோமாளிகள் போடும் அட்டாகாசம் தான் இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமாகக் காரணம். அந்தவகையில் 4 சீசனில் கோமாளியாக இருந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் மணிமேகலை.

சமீபத்தில் இனிமேல் குக் வித் கோமாளியில் நான் இல்லை என்று கூறி ஷாக் கொடுத்தார். நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை விலக என்ன காரணம் என்று பலர் பலவிதமாக காரணங்களை கூறி பரப்பி வருகிறார்கள். அதேபோல் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டதாகவும் செய்திகள் இணையத்தில் பரவி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விஜய் டிவி புகழ் சமீபத்தில் அளித்த பேட்டியில் என்ன நடந்தது என்று கூறியிருக்கிறார். மணிமேகலை விலகியது அவர்களின் தனிப்பட்ட விசயம். கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரியல.
என்ன ஏது தெரியாமல் ரூமர்ஸ் பரப்பாதீர்கள். மணிமேகலை பிரக்னட்-ஆக இருந்தால் எல்லோருக்கும் சந்தோஷம் தான். அதை வைத்து வதந்திகளை பரப்பாதீர்கள். அவர்களுக்கு எதுவேனாலும் நடந்திருக்கலாம், என்று புகழ் கூறியுள்ளார்.
#Pugazh About #Manimegalai pic.twitter.com/wNPSXconXA
— chettyrajubhai (@chettyrajubhai) March 3, 2023