புகழை விட்டுவிட்டு பாடகரை பாலோ செய்யும் குக் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தாண்டி பெரியளவில் டிஆர்பி உள்ளிட்ட அனைத்து சாதனையும் படைத்து வருகிறது பிரபல தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதற்கு முதல்மட்ட காரணமாக இருப்பது அந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழ் தான். தன்னுடைய காமெடி ரீயாக்ஷன் மற்றும் சிரிப்பூட்டும் சிறப்பு வகையால் மக்கள் மனதையும் கவர்ந்து வருகிறார்.
முதல் சீசனை தொடர்ந்து இரண்டாம் சீசன் பெரிய ஹிட் கொடுத்து அனைத்து நிகழ்ச்சி குக் மற்றும் கோமாளிகளின் வாழ்க்கையை மாற்றி வருகிறது. தற்போது அந்த தொலைக்காட்சி குக் வித் கோமாளியின் குக் மற்றும் கோமாளிகள் இல்லாத நிகழ்ச்சியே வேண்டாம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களை கொண்டு டிஆர்பியை ஏற்றி வருகிறது.
அந்தவகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் குக் மற்றும் கோமாளிகளை இழுத்து சிரிக்க வைத்து வருகிறது. எப்போதும் புகழ் - பவித்ராவின் ஜோடியை பற்றி பலர் அறிந்து நல்ல ஜோடி என்றும் பெயர் வாங்கி வருகிறார்கள். புகழால் தான் எனக்கு இந்த பெயர் என்று நடிகை பவித்ராவும் மேடையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா நடிகை மீரா கிருஷ்ண குமாரின் மகனான சூப்பர் சிங்கர் போட்டியாளர் ஆதித்யா கிருஷ்ணனை வைத்து காதல் கிசுகிசு என்று காமெடியாக புகழை வைத்து கலாய்த்துள்ளனர்.
மேலும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போன்றும் கிண்டலடித்தும் காமெடியாக நிகழ்ச்சியை எடுத்துள்ளனர். தற்போது இணையத்தில் இதுபற்றி குக் வித் கோமாளி ரசிகர்கள் வைரலாக பேசி வருகிறார்கள்.