நடிகர் புனீத் ராஜ்குமார் இப்படிதான் மரணித்தார்! மருத்துவர் கூறிய பதில்..
cinema
doctor
kannada
puneethrajkumar
By Edward
கடந்த 29 ஆம் தேதி இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஏற்படுத்திய செய்தி கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மரணச்செய்தி தான். 46 வயதில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக புனீத் மரணமடைந்ததில் சில மர்மங்கள் இருக்கிறது என்று சிலர் புகாரளித்தனர்.
அதில் குடும்ப மருத்துவரின் அலட்சியமான நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து மருத்துவர் ரமணா ராவின் வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு அளித்தது. பின் அவரை விசாரணை செய்தனர். என் இடத்திற்கு புனீத்தின் நண்பர்கள் அழைத்து வந்தனர்.
சிகிச்சைக்கு வந்த போது புனீத் சோர்வாக இருந்ததால் இசிஜி எடுத்து பார்த்தபோது இதயத்துடிப்பில் சிக்கல் இருந்ததை அறிந்தோம். வியர்வை அதிகரித்து வந்ததால், மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன் என்று அவர் விசாரணையிலும் பேட்டியிலும் கூறியுள்ளார்.