புனீத் ராஜ்குமார் மறைவுக்கு அவரின் குடும்ப மருத்துவர் தான் காரணமா?..கோவத்தில் ரசிகர்கள்!
Puneeth Rajkumar
By Jeeva
கன்னட உலகின் சூப்பர்ஸ்டாராக இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் புனீத் ராஜ்குமார் காலமானார்.
ஹார்ட் அட்டாக்- ஆல் அவர் உயிர் மருத்துவமனையில் பிரிந்த செய்தி அவரது ரசிகர்களான லட்சக்கணக்கான மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.
இதனிடையில் புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு அவரது குடும்ப மருத்துவர் அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வந்தனர்.
இதையடுத்து, அவரது குடும்ப மருத்துவர் ரமணாராவ் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அவருக்கு கர்நாடக போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.