இது நம்ம லிஸ்ட்லயே இல்லப்பா! புஷ்பா இந்தியில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

samantha boxoffice tollywood sukumar pushpa alluarjun rashmikamandanna pushpahindi
By Jai Jan 04, 2022 08:55 AM GMT
Report

கொரோனா காலக்கட்டத்தில் தற்போது படங்களின் வெளியீடு கடந்த ஆண்டு தான் ஆரம்பித்தது. இரு வருடங்களாக சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பை கொரோனா கொடுத்துள்ளது. அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டை கொடுத்த படம் புஷ்பா.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. தற்போது வரை உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதற்கு காரணம் சமந்தாவின் ஐட்டம் பாடல் தான். கதாநாயகிக்காக வர வேண்டிய கூட்டம் சமந்தாவின் ஓ அண்டவா மாவா பாடலுக்காகவே கூடியது. அந்தவகையில் சமந்தாவின் மாரிக்கெட் இப்படத்தினால் எகிறிவருகிறது. புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நல்ல வசூல் பெற்றாலும் இந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதுவரை இந்தியில் மட்டும் 57 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் இப்படியொரு வசூலை பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

அதிலும் ஒரு நாள் மட்டும் 6.10 கோடியை பெற்றுள்ளது. வரும் காலத்தில் புஷ்பா இந்தியில் மட்டும் 75 கோடியை வசூலிக்கும் எனவும் கூறப்படுகிறது.