இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான தேவயானி.. வருங்கால கணவரை நினைத்து கதறும் வீடியோ

Devayani Serials
By Edward Oct 04, 2022 09:17 AM GMT
Report
790 Shares

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. அஜித், விஜய், சூர்யா என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார். பின் பட வாய்ப்புகள் குறைய சீரியல்களில் நடித்து வந்தார்.

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான தேவயானி.. வருங்கால கணவரை நினைத்து கதறும் வீடியோ | Puthuputhuarthangal Devayani Marriage Scene

சீரியலில் இரண்டாம் கல்யாணம்

அதிலும் கோலங்கள் தொடர் மக்களிடம் பெரிய ரீச் பெற்றது. இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் திருமணம் ஆகி கணவரை இழந்து தனது மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இப்படியொரு நிலையில் ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அபிஷேக்குடன் லட்சுமி வேடத்தில் நடித்துவரும் தேவயாகிக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். அந்த திருமணத்திற்கு தேவயானி மாடர்ன் உடை அணிந்து போட்டோஷூட் எல்லாம் செய்து ரெடியாகினார்.

ஹரிக்கு விபத்து

இந்நிலையில் ஹரிக்கு திருமணத்தன்று விபத்து ஏற்பட. இதை தேவயானியிடம் மேடி விபத்தில் ஹரி சிக்கியுள்ளதாக மணமேடையில் இருப்பவர்கள் முன் கூறுகிறார். இதனால் ஷாக்கான மணப்பெண் தெவயானி அதிர்ச்சியில் கதறி எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று அழுது புலம்புகிறார். தேவயானியின் இந்த நடிப்பை பலர் பாராட்டினை கூறி வருகிறார்கள்.