அதை செய்ய சொல்லியும் கேட்காத நடிகர் தனுஷ்!! நடிகை தமன்னா கொடுத்த ஷாக்

Dhanush Tamannaah Gossip Today Jailer
By Edward Aug 03, 2023 12:30 PM GMT
Report

இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா இரு வெப் தொடர்களுக்கு பின் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக இணையத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகைகளில் ஒருவராக தமன்னா இருந்து வந்தார்.

அதற்கு காரணம் படுக்கையறை காட்சிகள் மற்றும் எல்லைமீறிய காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தது தான். மேலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருக்கிறார். அவர் ஆட்டத்தில் காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது.

ஜெயிலர் படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார். ஒரு பேட்டியில், டாப் நடிகர்களிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

விஜய்யின் 68 வது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பேன் என்றும் நான் நடிப்பதாக வரும் தகவல் பொய் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் தளபதி 68ல் எனக்கு நடிக்க விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித்திடம், அடுத்து எப்போ எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்பேன் என தெரிவித்திருக்கிறார். அஜித் நன்றாக சமைப்பார், ஷூட்டிங்கில் அவர் இட்லி செய்து கொடுத்தார், மிருதுவான இட்லியை எங்கேயும் நான் சாப்பிட்டதில்லை. சாப்பாடு மட்டுமல்ல அவருடன் பைக் ரைடுக்கு கூப்பிட்டாலும் போவேன் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷை பார்க்கும் போதெல்லாம், மும்பைக்கு வந்தால் எனக்கு கால் பண்ணுங்க என்று கூறுவேன். ஆனால் மும்பை வந்தால் அவர் போன் பண்ணவே மாட்டார், அதே கேள்வியை தான் கேட்பேன் என்று தெரிவித்துள்ளார். கங்குவா படத்தின் கதை என்ன என்று சூர்யாவிடம் கேட்பேன் என்றும் நடிகை தமன்னா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.