பதில் சொல்லலன்னா திமிர்ன்னு அர்த்தமா? பணத்தை வாங்கி அப்படி பேசுவாங்க!! நடிகை அனுபமா..
அனுபமா பரமேஸ்வரன்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் தன்னுடைய முன்னாள் காதலன் பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் அனுபமாவை விமர்சித்து வந்த நிலையில், சோசியல் மீடியா விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஒரு படத்தை பார்த்தப்பின், அதன் மீதான விமர்சனங்கள் எப்போதும் வேண்டும், ஆனால் அவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படி நேரையாக விமர்சிப்பவர்களின் விவாதத்தில் பங்கேற்க எனக்கு ஆர்வமுண்டு. அதுபோன்ற விவாதங்கள் நம்மை வள்ர்க்க உதவும், ஆனால் சிலர் தனிப்பட்ட விரோதம் காரணமாக, பணம் பெற்று கொண்டு ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை.
திமிர்
சோசியல் மீடியாக்களில் வரும் அனைத்து விமர்சனங்களுக்கும் நான் பதிலளிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். பதில் சொல்லாவிட்டால் திமிர் என்று பொருளில்லை. பதில் சொன்னால் வேலை இல்லையா? என்கிறார்கள்.
இந்த அணுகுமுறையில் உடன்பாடில்லை. எனக்கு பிடித்த பதிவுகளுக்கு கருத்து தெரிவிப்பது என் விருப்பம், அதை யாரும் கேள்வி கேட்கமுடியாது. அதற்கு யாரிடமும் நான் அனுமதி கேட்க வேண்டியதில்லை. எனக்கு ஓய்வு நேரம் இருந்தாலும், அது இல்லாததுபோல் நான் ஏன் நடிக்க வேண்டும் என்று சரமாரியாக பேசியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்..