வாழ்க்கை கொடுக்க மாட்டேன்-னு சொன்ன, இப்போ பாரு.. வடிவேலுவை திட்டிய ராதிகா!!
80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ராதிகா. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு பற்றி ராதிகா பேசிய பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், " நான் வடிவேலு குறித்து பேச விரும்பவில்லை. ஒரு முறை நாங்கள் விமானத்தில் சென்று கொண்டு இருந்தேன். அப்போது வடிவேலுவை சந்தித்தேன். அப்போது அவருடன் என்னுடைய கணவர் பற்றி பேசி கொண்டு இருந்தோம்".
"அந்தநேரத்தில் என்னுடைய மகன் வடிவேலுவிடம் , உங்களை ரொம்ப பிடிக்கும், என்னுடைய அப்பா உடன் சேர்ந்து நடிக்கிறீர்களா? என்று ஆசையுடன் கேட்டான்.
அதை கேட்டு சிரித்த வடிவேலு, நான் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் வாழ்க்கை கொடுக்கமாட்டேன் என்று பதில் அளித்தார். இப்போது நாங்கள் எப்படி இருக்கோம், நீ எங்க இருக்கனு பாரு?" என ராதிகா கோபமாக பேசியுள்ளார்.