வாய்ப்பிற்காக எது வேணாலும் ஓகே! 22 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ்! நடிகை..

ajaydevgan Rashi Khanna Luther
By Jai Jun 12, 2021 10:56 AM GMT
Report

கொரோனா சமயத்தில் சினிமாத்துறையில் பல இழப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்றாக லாக்டவுனால் படப்பிடிப்புகள் நிருத்தி வைக்கப்பட்டதுதான். இதனால் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாவது அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் தற்போது வரை பல வெப் சீரிஸ் படங்கள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் கிரைம் திரிலர் வெப் சீரிஸ்களில் ஒன்றாக பார்வையாளர்களை ஈர்த்தது லூதர் என்ற வெப் சீரிஸ் படம் தான். பிபிசி தயாரித்து 5 சீசன்களும் பெரிய ஹிட் கொடுத்தது லூதர். தற்போது அந்த வெப் சீரிஸ் பாலிவுட்டில் ருத்ரா என்ற பெயரில் ரீமெக் செய்யப்படுகிறது.

அதில் டிடெக்டிவ்வாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளாராம். பிரம்மாண்ட செலவில் உருவாகப்படும் இந்த படத்தினை இயக்குநர் ராஜேஷ் மபூஸ்கர் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம் படக்குழு. அதுவும் அஜய் தேவ்கன்னுடன் 22 வயது குறைந்த நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளது பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.