திருமணமாகி 9 ஆண்டுகள் குழந்தை இல்லை.. நடிகை ரச்சிதா கணவரை பிரிய இப்படியொரு காரணம் இருக்கிறதா..

Bigg Boss Rachitha Mahalakshmi
By Edward Oct 19, 2022 04:15 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி முடிந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இரண்டாம் சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல சீரியல் வாய்ப்பினை பெற்றார்.

திருமணம் - விவாகரத்து

சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த ரச்சிதா தொலைக்காட்சி சேனலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் சினிமா வாய்ப்பின் காரணத்திற்காகவும் சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் வேறொரு தொலைக்காட்சிக்கு தாவி சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ரச்சிதா சில ஆண்டுகளுக்கு முன் தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டதால் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

விரைவில் இருவரும் விவாகரத்து பெறப்போவதாகவும் கூறி வந்த நிலையில், தினேஷ் அப்படியான முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரச்சிதா பிக்பாஸ் 6ல் கலந்து கொண்டு வருகிறார். கணவரை விட்டு பிரியவும் சீரியல் நடிப்பது பற்றிய சில விசயங்களை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரச்சிதா. ரச்சிதா சம்பாதிக்கும் பணத்தை அவரது அப்பா அம்மாவுக்கு கொடுக்க கூடாது என்று தினேஷ் பிரச்சனை செய்தது பற்றி அவர் கூறி இருக்கிறார்.

பிரச்சனை

அந்த பிரச்சனையையே நான் அதிகம் பார்த்துவிட்டேன். அதனால் அவர்களுக்கு என்று ஒரு பணம் இருக்க வேண்டும் என சொல்விட்டேன். நான் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அதை எனக்கு கொடுக்காதீர்கள் என அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன். மேலும் தினேஷிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருந்ததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று கூறியுள்ளாராம். ஆனால் என்னால் நடிக்காமல் இருக்க முடியாது என்று கூற வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை கருத்து வேறுபாடாக முடிய இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.