கணவரை பிரிந்து ஹோம்லியாக இருந்த ரச்சிதாவா இது? பிக்பாஸ் போகும் முன் போட்ட ஆட்டம்..

Bigg Boss Rachitha Mahalakshmi
By Edward Oct 13, 2022 05:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி முடிந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இரண்டாம் சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல சீரியல் வாய்ப்பினை பெற்றார்.

சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த ரச்சிதா தொலைக்காட்சி சேனலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் சினிமா வாய்ப்பின் காரணத்திற்காகவும் சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் வேறொரு தொலைக்காட்சிக்கு தாவி சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ரச்சிதா சில ஆண்டுகளுக்கு முன் தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டதால் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

விரைவில் இருவரும் விவாகரத்து பெறப்போவதாகவும் கூறி வந்த நிலையில், தினேஷ் அப்படியான முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் ரச்சிதா திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இதுவரை ஹோம்லி கேர்ள்-ஆக இருந்த ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் முன் கிளாமர் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஹோம்லி ரச்சிதா மகாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.