நடிகருடன் படுக்கையறை காட்சி..காசுக்காக அதை பண்ணல!! நடிகை ரச்சிதா விளக்கம்...
Fire ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சமீபத்தில் அவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரச்சிதாவிற்கு கொடுத்தது.
இப்படத்தினை தொடர்ந்து Fire என்ற படத்தில் நடித்துள்ளார் ரச்சிதா. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மெது மெதுவாய் என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் ரச்சிதா மற்றும் பாலாஜி நெருக்கமாக நடித்த படுக்கையறை காட்சிகளும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கிளாமர் ரோலில் நடிப்பது குறித்து ரச்சிதா மனம் திறந்து பேசியுள்ளார்.
ரச்சிதா விளக்கம்
ச்சீ ச்சீ.. காசுக்காக அதை நான் பண்ணல, இதை வெச்சுத்தான் காசு பண்ணனும் என்று நினைத்தால் அது ரொம்பவே தப்பாகிவிடும். இது அந்த மன நோக்கமே கிடையாது.
சமீபத்தில் கூட ஒரு திருமணம் மண்டபத்தில் ஒரு பெண் பிகினி ஆடையணிந்து கொண்டு என் உடை என் சுதந்திரம் என்றும் பிகினி அணிந்துதான் தாலிக்கட்டுவேன் என்று கூறினார். இதை பார்த்தபோது எனக்கு ஷாக்காகிவிட்டது.
நம் ஆடை நம் உரிமை என்று என்ன சொன்னாலும் இந்த அளவுக்கா இறங்க முடியும். அதனால் அவர் அப்படி செய்தது அந்த பெண்ணுக்கு மட்டும் பாதிப்பில்லை, அதை பார்த்தப்பின் மற்ற பெண்களையும், எல்லோரும் அப்படித்தான் பார்ப்பார்கள்.
இந்த படத்தில் அதை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள் என்று ரச்சிதா மகாலட்சுமி ஓப்பனாக பேசியுள்ளார்.