அந்த நபர் பேச்சை கேட்டு கணவர் மீது பொய் புகார்.. போலீசாரிடம் மாட்டிக்கொண்ட ரசித்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரச்சிதா.
இவர் 2015 -ம் ஆண்டு நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு ரசித்தா தினேஷ் எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிக்கிறார் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருகிறார் என்று போலீசாரில் புகார் அளித்தார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், தினேஷ் தவறான நோக்கத்தில் மெசேஜ் அனுப்பவில்லை, ரசித்தா கூறுவது பொய்யான தகவல் என்று தெரியவந்துள்ளது.
இது போன்று புகார் அளித்தால் விவாகரத்து எளிதில் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இப்படி ரசித்தா செய்தார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் ரசித்தா வழக்கறிஞர் சொல்லிக் கொடுத்து இப்படி செய்தார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.