கணவரை பிரிந்ததும் இப்படியா!!இதுவரை இல்லாத அளவிற்கு ஆளே மாறிய நடிகை ரச்சிதா
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி 2 சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியலுக்கு பின் நடிகர் தினேஷ் கோபாலசாமியை 2013ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் சீரியலில் நடித்து வந்த ரச்சிதா பிக்பாஸ் 6 சீசனில் போடியாளராக கலந்து கொண்டு 91 நாட்களுக்கு பின் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே கணவர் தினேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார் ரச்சிதா.
பிக்பாஸ் முடிந்தது இருவரும் சமரசம் செய்து சேர்ந்து வாழ்வார்கள் என்று நினைத்திருந்தனர். ஆனால் ரச்சிதா, தினேஷ் தன்னை மிரட்டி வருவதாக சில மாதங்களுக்கு முன் புகாரளித்திருந்தார். பின் விவாகரத்து செய்யலாம் என்று தினேஷ், ரச்சிதாவிடம் கூறியதாகவும் பேட்டியில் தெரிவித்தார்.
ரச்சிதா பிக்பாஸ் நண்பருடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். கணவரை விட்டு பிரிந்ததும் கழுத்துக்கு கீழ் பகுதியில் டாட்டூ போட்டு புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு சேலையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் மயக்கியுள்ளார்.

