வயதான நடிகருடன் ரொமான்ஸ் செய்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! வீடியோவை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Bigg Boss Rachitha Mahalakshmi Actress Dinesh Gopalsamy
By Edward Jan 20, 2024 10:30 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வயதான நடிகருடன் ரொமான்ஸ் செய்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! வீடியோவை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.. | Rachitha Separate Dinesh Romance With Old Actor

திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கு காரணம் குழந்தை இல்லை என்பதாலும், தினேஷ் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் செய்திகள் கசிந்தது.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசுபொருளாக மாறியது. ஆனால் ரச்சிதா தந்தை மரணத்திற்கு பின் தினேஷுடன் சேர மறுத்து வருகிறார்.

இந்நிலையில், தினேஷ் டாப் 5 இடத்தினை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். உள்ளே போகும் போது எப்படியாவது என் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக கூறியிருந்தார்.

விஜயகாந்த மறைவுக்கு 2 நாட்களுக்கு முன் செய்த செயல்!! கண்ணீருடன் பகிர்ந்த மகன்..

விஜயகாந்த மறைவுக்கு 2 நாட்களுக்கு முன் செய்த செயல்!! கண்ணீருடன் பகிர்ந்த மகன்..

ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்தப்பின்னும் அவர் மாறவில்லை என்று மறைமுகமாக தெரிவித்திருக்கிறார். தற்போது தானுண்டு தன் வேலையுண்டு இருக்கும் ரச்சிதா, வயதான நடிகருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

அந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை தற்போது ரச்சிதா வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் ரச்சிதாவை கலாய்த்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.