இந்த நடிகையின் வாயால் தேசிய விருதை இழந்த ராதா! இதுதான் காரணம்..

radha radhika tamilactress
By Edward Jan 06, 2022 08:30 PM GMT
Report

மண் வாசம் மாறாமல் கிராமத்து கதையை இப்படித்தான் எடுக்க வேண்டும்ம் என்று வருங்கால இயக்குனர்களுக்கு தன் படத்தின் மூலம் உதாரணமாக அமைந்தவர் இயக்குனர் பாரதிராஜா. பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் இவரின் வழிக்காட்டுதலால் இந்த இடத்திற்கு வந்தனர்.

அப்படி சிவாஜியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு முதல் மரியாதை படத்தினை எடுத்து பெரிய ஹிட் கொடுத்தார். அப்படத்தில் நடித்த அனைவரின் கேரியருக்கும் மிகப்பெரிய படமாக அமைந்தது. அப்படத்தில் சேலை மட்டும் அணிந்து நடித்தவர் நடிகை ராதா.

அனைவரையும் கவர்ந்த அவரின் நடிப்பு பிலிம்பேர் விருதினை கொடுத்தது. ஆனால் தேசிய விருது பெறுவதற்கு அனைத்து திறமையும் இருந்து அவரால் வாங்க முடியவில்லை.

அதற்கு காரணம் ராதாவிற்கு டப்பிங் கொடுத்தது நடிகை ராதிகா. டப்பிங் வேறொருவர் பேசிய ஒரு காரணத்தால் தான் அந்த வாய்ப்பை இழந்துள்ளார் ராதா.