என்ன பேரு இது!! ஆர்யாவின் முன்னாள் காதல் நடிகையை மேடையில் கலாய்த்து தள்ளிய நடிகர் ராதா ரவி..
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ராதா ரவி. நடிகர் ராதாவின் மகனாக வில்லன் நடிகராக ஆரம்பித்து பல நூறு படங்களில் நடித்து பிரபலமானார் ராதா ரவி.
தமிழ் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சமீபகாலமாக மேடையில் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியும் வருகிறார். தற்போது நடிகர் டேனியல் ஆனிபோப் நடிப்பு கற்றுக்கொடுக்கும் பள்ளியை ஆரம்பித்திருக்கிறார்.
Dani's Acting Workshop Event நிகழ்ச்சியில் நடிகர் ராதா ரவி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, நிகழ்ச்சிக்கு வந்த நடிகைகளான அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி பெயர்களை வாசித்து, வாய்ல நுழையாத பெயரை வெச்சா நான் என்ன பண்றது.
சிந்திச்சி வாய்ல நுழையாத பெயரை வெச்சிருக்கீங்கன்னு நடிகைகளை கலாய்த்துள்ளார். மேலும் மலையாள தயாரிப்பாளர் பிரதீப்பை, உன்னை மலையாளின்னு யாரும் கண்டுபிடிக்கவே முடியாது என்று கலாய்த்திருக்கிறார்.