70-வயது நடிகரை அசிங்கப்படுத்திய விஜய்!! பல ஆண்டு கழித்து வெளிச்சத்துக்கு வந்த உண்மை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யின் சில தவறான நடவடிக்கையால் சில நட்சத்திரங்கள் மனகசப்புக்கும் ஆளாகி இருக்கிறார்கள். அப்படி நடிகர் நெப்போலியன், போக்கிரி படத்தின் போது தன் குடும்பத்தினரை கேரவனில் கூட்டிச்செல்லும் போது அவமானப்படுத்தப்பட்டேன் என்று கூறியிருந்தார்.
இதனால் அன்று வரை விஜய்யை ஒதுக்கி வருவதாகவும் அந்த சம்பவத்தை விஜய் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார். நெப்போலியனை போல், பிரபல நடிகர் ராதாரவியும் விஜய்யின் செயலால் சந்திக்க மறுத்து வருவதாக மீபத்தில் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியொன்றில் ராதாரவி இதை கூறியிருந்தார்.
சர்கார் படத்தில் வில்லனாக விஜய்யுடன் ராதாரவி நடித்திருந்தார். என் பேரன் விஜய்யின் தீவிர ரசிகன் என்பதால் சர்கார் படத்தின் ஷூட்டிங்கின் போது அவரை சந்திக்க வைத்தேன். குடும்பத்துடன் விஜய்யை சந்தித்து புகைப்படமும் எடுத்தேன்.
அதன்பின் சர்கார் படத்தின் ஆடியோ லான்சின் போது மயங்கி மேடை படிக்கல்லில் இருந்து தவறிவிழுந்தேன். உடனே விஜய் உதவி செய்தார். அதற்கு நன்றி சொல்ல விஜய் மேனேஜருக்கு கால் செய்தேன். அப்போது அன்று வந்தது போல் யாரை கூட்டிவர வேண்டாம் என்று கூறினாராம்.
உடனே நான் வரலன்னு சொல்லி போனை வைத்துவிட்டேன். யாரு என் குடும்பம் தானே கூட்டிச்சென்றேன், அவருக்கு கூட்டமா தான் தெரியும், என் குடும்பம்-ல என்று புலம்பி இருக்கிறார்.