நானும் நாளைக்கு இறக்கலாம்..பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த இதான் காரணம்!! ராதா ரவி..
ராதா ரவி
திரைக்கதை மன்னன் பாக்யராஜ் கடந்த ஜூன் 27 ஆம் தேதி காலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அவர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பாக்யராஜ் இறுதி அஞ்சலிக்கு நேரில் சென்றது குறித்து மூத்த நடிகர் ராதாரவி யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு ஓபனாக மனதில்பட்டதை கூறியிருக்கிறார்.
அதில், நானும் பாக்யராஜுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நாளைக்கு நானும் இறந்து போகலாம், அப்போது என் உடலுக்கு மற்றவர்கள் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற சுயநலமும் உண்டு.
அதேபோல் இன்று நாம் மற்றவர்களின் துயரத்தில் பங்கேற்றால்தான் நாளை நம் குடும்ப துயரத்திலும் மற்றவர்கள் வந்து நிற்பார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், ராதிகா, சுஹாசினி பத்திரிக்கையாளர்களை திட்டியது குறித்து பேசுகையில், பத்திரிககையாளர்களை இப்படி திட்டுவது எனக்கு சரியாக தோன்றவில்லை. நம்மை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. நடிகர்களாகிய நாமும் அவர்களை மதிக்க வேண்டும்.
அதே சமயம், ஏற்பாட்டாளர்கள் சரியான கட்டுப்பாடுகளை செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர்களை ஒரு எல்லைக்குள் இருக்க சொலியிருந்தால் அதை அவர்கள் பின்பற்றி இருப்பார்கள், இதுதான் என் மனநிலை என்று ராதா ரவி தெரிவித்துள்ளார்.