ஐஸ்வர்யா ராய்யை கெடுத்துருப்பேன்.. கொச்சையாக பேசிய ராதாரவி

Aishwarya Rai Radha Ravi
By Kathick Nov 21, 2023 10:15 AM GMT
Report

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மன்சூர் அலிகானின் பேச்சு. நடிகை திரிஷாவை மிகவும் மோசமான வகையில் பேசியதால் மன்சூர் அலிகானுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்யை கெடுத்துருப்பேன்.. கொச்சையாக பேசிய ராதாரவி | Radharavi Spoked Badly About Aishwarya Rai

நடிகர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மகளீர் ஆனணயம் என பலரும் கண்டித்தும் இவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. நான் செய்தது தவறு இல்லை, அது தவறாக காட்டப்பட்டு விட்டது என கூறி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.

இந்த சமயத்தில் மன்சூர் அலிகான் பேசியது மட்டுமே கண்டிக்கத்தக்கது அல்ல, இவரை போல் இதற்குமுன் பலரும் நடிகைகள் குறித்து மோசமாக பேசியுள்ளனர். அதில் ஒருவர் தான் ராதாரவி.

ஐஸ்வர்யா ராய்யை கெடுத்துருப்பேன்.. கொச்சையாக பேசிய ராதாரவி | Radharavi Spoked Badly About Aishwarya Rai

இவர் ஒரு முறை மேடையில் பேசும்போது, எனக்கு ஹிந்தி தெரியாது, தமிழ் தான் தெரியும். எனக்கு ஹிந்தி தெரிந்து இருந்தால் பாலிவுட் சென்று ஐஸ்வர்யா ராய்யை கெடுத்துருப்பேன். எனக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தான் படத்தில் கொடுக்கிறார்கள். வேறு என்ன எனக்கு கடவுள் வேடமா படத்தில் கொடுக்கிறார்கள்' என பேசினார்.

இந்த வீடியோவை பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விஷயமும் தற்போது படுவைரலாகி வருகிறது.