திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்ற ரஜினி பட நடிகை ராதிகா.. வைரலாகும் புகைப்படம்..

Radhika Apte Indian Actress Tamil Actress Actress
By Edward Dec 14, 2024 06:53 AM GMT
Report

ராதிகா ஆப்தே

பாலிவுட் சினிமாவில் 18 வயதில் நடிகையாக அறிமுகமாகி பெங்காளி, மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.

திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்ற ரஜினி பட நடிகை ராதிகா.. வைரலாகும் புகைப்படம்.. | Radhika Apte Post Her Child Photo First Time

தமிழில் 2012ல் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமாகிய ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.

கடந்த 2012ல் பெனடிக் டெய்லர் என்ற இசைக் கலைஞரை திருமணம் செய்தார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்த ராதிகா ஆப்தே தற்போது அவரது குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.