ஷாருக்கான் மகன் இயக்கிய வெப் தொடர்!! பிரமாண்டமாக எண்ட்ரி கொடுத்த அம்பானி குடும்பம்..
'தி பேட்ஸ் ஆப் பாலிவுட்'
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சொத்துக்களை வைத்திருக்கும் பிரபலமாகவும் திகழ்ந்து வருகிறார் ஷாருக்கான். தற்போது அவரின் மகன் ஆர்யன் கான் 'தி பேட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
இதில், நடிகர் லஷ்யா லால்வானி, பாபி தியோ, ஷஹிர் பம்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அபிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், அர்ஜுன் கபூர், கரீனா கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்த வெப் தொடர் இன்று செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் நெல்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. தி பேட்ஸ் ஆப் பாலிவுட் வெப் தொடரின் ப்ரீமியர் நிகழ்ச்சி பாலிவுட்டில் இன்று நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட்டை சேர்ந்து பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
அம்பானி குடும்பம்
அதில், முகேஷ் அம்பானி - நீதா அம்பானி கலந்து கொண்டுள்ளனர். மேலும் அவர்களின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ஸ்லோகா மெஹ்டா மற்றும் ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சண்ட்டும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அம்பானி மருமகள்கள் இருவரும் பிரமாண்டமான உடையில் காட்சியளித்து வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.












