மோஸ்ட் ஸ்டைலிஸ் நபர்களில் இணைந்த அம்பானி மகன் ஆன்ந்த் அம்பானி - மருமகள் ராதிகா..
ஆன்ந்த் அம்பானி - ராதிகா
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியினர் கடந்த ஜூலை மாதம் தனது மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தனர்.
அதிலும் அம்பானியின் மருமகள் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் அனைத்தும் வியக்கும்படியாக இருந்தது. சுமார் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் நடந்த இத்திருமணத்தில் அம்பானி குடும்பத்தினர் விலையுயர்ந்த ஆடை அணிகள் அணிந்து மிரளவைத்தனர். ரஜினிகாந்த், அட்லீ ப்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
நியூயார்க் டைம்ஸ்
இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் ஆண்டு தோறும் வெளியிட்டு வரும் மோஸ்ட் ஸ்டைலிஸ் நபர்கள் 2024 என்ற பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
63 பேர் இடம் பெற்ற இந்த லிஸ்ட்டில் ஹாலிவுட் நடிகை செண்டயா, ரியானா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருப்பதை போல் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.