அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் ஆடை!! இத்தனை லட்சமா?
ஷாருக்கானின் மகன் ஆர்யன்
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 18வது இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் பிரமாண்டமான முறையில் பல ஆயிரம் கோடிகள் செலவில் திருமணத்தை நடத்தி முடித்தார்.
ஒரு மாதகாலமாக நடந்த இத்திருமண விழாவில் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. திருமணத்திற்கு பின் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக ராதிகா தற்போது திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்குநராக அறிமுகமாகி இயக்கிய The Bads Of Bollywood என்ற வெப் தொடரினை இயக்கியுள்ளார்.
இந்த வெப் தொடர் இன்று பாலிவுட் பிரபலங்களுக்காக ப்ரீமியர் நிகழ்ச்சி வைக்கப்பட்டது. பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், முகேஷ் அம்பானி - நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி - ஸ்லோகா மெஹ்டா, ராதிகா மெர்ச்சண்ட் கலந்து கொண்டனர்.
ராதிகா மெர்ச்சண்ட்டின் ஆடை
ராதிகா மெர்ச்சண்ட் சிகப்புநிற ஆடையில் மின்னும் முகத்தோற்றத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் அணிந்த அந்த சிகப்புநிற கவுன் ஆடை, சுமார் 3,665 அமெரிக்க டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3,23,100 இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரின் ஆடையை பார்த்து பலரும் வியந்து வருகிறார்கள்.


