கோபத்தில் கேப்டன் விஜயகாந்தை அடித்த விஜய் தந்தை.. உண்மையை உடைத்த நடிகை ராதிகா..

Vijay Vijayakanth Radhika Sarathkumar S. A. Chandrasekhar
By Edward Oct 12, 2022 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக திகழ்ந்து பல இயக்குனர்கள் நடிகர்கள், நடிகைகளை வளர்த்து விட்டு பெரிய இடத்திற்கு கொண்டு சென்றவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். தன் மகன் நடிகர் விஜய்யின் இந்த உச்சக்கட்ட வெற்றியை அடைய முக்கிய காரணமாக இருந்தவர் எஸ் ஏ சி அவர்கள் தான்.

விஜயகாந்த் - எஸ் ஏ சி

அப்படி தன் மகனை நடிகர் விஜயகாந்திற்கு தம்பியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். அந்தவகையில் நடிகர் விஜயகாந்தின் சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க வைத்து இயக்கியவர் எஸ் ஏ சி. அப்படி ஒரு முறை விஜயகாந்திற்கு அடிப்பதை கற்றுக்கொடுத்தவர் எஸ் ஏ சி என்றும் கோபத்தில் நடிப்பு வரவில்லை என்றால் கடுமையாக திட்டிவிடுவார் என்றும் நடிகை ராதிகா கூறியுள்ளார் சில ஆண்டுகளுக்கு முன் பா விஜய் நடிப்பில் எஸ் ஏ சி சிறு ரோலில் நடித்து வெளியான படம் நையப்புடை.

ராதிகா

இப்படத்தின் டிரைலர் லான்ச் விழாவில் கலந்து கொண்ட ராதிகா மேடையில் எஸ் ஏ சந்திரசேகர் பற்றிய சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார். விஜயகாந்த் இவரிடம் நிறைய முறை திட்டி வாங்கி இருக்கிறார். இவர் அடிப்பதால் விஜயகாந்த் எஸ் ஏ சி-யை பார்த்து பயப்படுவார். ஆனால் நான் மட்டும் தான் நடிகைகளில் திட்டு வாங்காத நடிகை என்று ராதிகா கூறியிருந்தார். ஆனால் விஜயகாந்தை நான் அடித்தது கிடையாது என்று எஸ் ஏ சந்திரசேகர் கூறியிருந்தார்.