உனக்கு ரெண்டு அப்பாவா..யார் அப்பா தெரியுமான்னு அவமானப்படுத்தினார்கள்? ராதிகாவின் மகள்..
ராதிகாவின் மகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ராதிகா. பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ராதிகா, 1990ல் ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து ரேயான் ஹார்டி என்ற மகளை பெற்றெடுத்தப்பின் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்தார். விவாகரத்துக்குப்பின் நடிகர் சரத்குமாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் ராதிகா.

சமீபத்தில் ராதிகாவின் மகள் ரேயானுக்கு கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுடன் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது. ரேயான் - அபிமன்யு தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
அவமானப்படுத்தினார்கள்
இந்நிலையில் ரேயான் அளித்த பேட்டியொன்றில், தற்போது வரைக்கும் என்னைப்பற்றி பலரும் பலவிதமான விசயத்தை பேசி வருகிறார்கள். அதில் முக்கியமாக என் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பற்றித்தான்.

இப்போது வரைக்கும் பலர் என்னிடம் கேட்பது, உனக்கு அப்பா யாருன்னு தெரியுமா? உனக்கு எத்தனை அப்பா என்று கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்வி, என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் உனக்கு உன் அப்பா யார் என்று தெரியுமா? உன் குழந்தைகளின் அப்பா யார் என்று தெரியுமா? என்று கேட்கிறார்கள்.
இப்படி அசிங்கமாக கேள்வி கேட்பவர்கள் என் குழந்தைகளை பார்த்து இருக்கிறார்களா? அவர்கள் இருவரும் அப்படியே என் கணவரை போலவே இருப்பார்கள். இந்த கேல்வியால் என்னை அவர்கள் அவமானப்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

அந்தக் கேள்வியால் எனக்கு எந்த அவமானமும் இல்லை, ஏனென்றால் என் அப்பா யார் என்று எனக்கு நன்றாக தெரியும், ஒரு காலத்தில் நடிகையின் மகள் என்று அவமானப்படுத்தினார்கள். உனக்கு அப்பா இல்லையா என்று கேட்டு அவமானப்படுத்தினார்கள். என் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டபோது உனக்கு இரு அப்பாவா என்று கேட்டு அசிங்கப்படுத்தினார்கள்.
என் கணவர் சன்ரைஸ் கிரிக்கெட் டீமில் தேர்வாகி விளையாடியபோது மாமியாரால் கிடைத்தது என்று சொல்கிறார்கள். இப்படி ஏதாவதொரு ஒரு விஷயத்திற்கு மக்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். ஒரு காலத்தில் இதைப்பற்றி எல்லாம் கண்டுக்கொல்லாமல் விட்டுவிட்டேன்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. உடனே அந்த விஷயத்திற்கு பதில் சொல்லாமல் நேரம் எடுத்து மோசமான கமெண்ட்டுகளுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் ராதிகாவின் மகள் ரேயன்.