நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் நடிகை ராதிகா. இதன்பின் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
கமல், ரஜினிகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். கதாநாயகியாக வலம் வந்த ராதிகா, ஒரு கட்டத்திற்கு மேல் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க துவங்கினார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் சித்தி, வாணி ராணி என பல சூப்பர்ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி என கூறப்படுகிறது. சென்னையில் இவருக்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. நடிப்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
மேலும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் முதலீடு செய்துள்ளாராம். இதுவே அவருடைய சொத்து மதிப்பு விவரம் என கூறுகின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.