கண்டபடி எழுதிய பத்திரிக்கையாளர்!! கோபத்தின் உச்சிக்கே சென்று துப்பாக்கியால் மிரட்டிய எம் ஆர் ராதா மகள் ராதிகா
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்து 60, 70 களில் எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்தவர் எம் ஆர் ராதா. அவரது பிள்ளைகளாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிகைகளாக திகழும் ராதா ரவி, ராதிகா, நிரோஷா போன்றவர்கள் இருக்கிறார்கள். பாரதிராஜா அறிமுகம் செய்யப்பட்ட ராதிகா தந்தை பெயரை எங்கும் பயன்படுத்தாமல் தன் நடிப்பு திறமையால் முன்னேறினார்.
அப்படி இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்தால் அப்பாவை உறித்து வைத்தது போல் கோபம் பொங்கி எழும். சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் தன்னை கேவலமாக விமர்சித்ததை எதிர்த்து கடற்கரை பகுதியில் செருப்பால் அடுத்தார் என்று கூறு செய்திகள் வந்தது. பத்திரிக்கை ஊடகங்கள் தன்னை பற்றி முரண்பாடான தவறாக எதாவது பேசினாலும் எழுதினாலும் அவர்களை அழைத்து நேருக்கு நேர் முகத்துக்கு எதிராகவே கேள்வி கேட்டுவிடுவாராம்.
அதேபோல் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவையும் திட்டித்தீர்த்து மிரட்டியும் இருந்திருக்கிறாரா ராதிகா. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ராதிகாவை பேட்டி எடுக்கும் போது முரண்பாடான கேள்விகளை கேட்க பத்திரிக்கை கூறியிருக்கிறது.
மறுநாள் அந்த பேட்டி பத்திரிக்கையில் வேறுமாதிரியான தலைப்பில் வேறு மாதிரியான ராதிகா புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை பார்த்ததும் ராதிகா கோபம் தலைக்கேறியுள்ளதாம். உடனே செய்யாறு பாலுவுக்கு கால் செய்த ராதிகா, தலைப்பு வேறுமாதிரி செய்தி வேறு மாதிரியாக இருக்கே என்று கேட்டிருக்கிறார்.
எடிட்டோரியலில் மாற்றியிருக்கிறார்கள் என்று செய்யாறு பாலு சொல்ல, இப்படியே ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா துப்பாக்கி எடுத்து சூட் பண்ணிடுவேன்னு மிரட்டியிருக்கிறார்.
ராதா மகள் கையில் குண்டடி பட்டு சாகுறது பெருமைதான் என்று கூறி செய்யார் பாலு மீது மீண்டும் கோபப்பட்டு போனை வைத்தார் ராதிகா என்று தெரிவித்துள்ளார் செய்யார் பாலு.