ரகுவரனின் மகனா இது? அம்மாவுடன் ரஜினிகாந்த்தை சந்திக்க இதுதான் காரணம்..
சினிமாவில் ஹீரோ ரோல் எப்படி படத்திற்கு முக்கியமோ அதுபோல் வில்லன் கதாபாத்திரமும் முக்கியம். அப்படி தமிழில் 80, 90 களில் முன்னணி வில்லனாக இருந்தவர் மறைந்த நடிகர் ரகுவரன். சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் லண்டன் இசைக் கல்லூரியில் படித்து உள்ளார். இதுவரை ரகுவரன் 30 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
ரகுவரன் கடைசியாக யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு தந்தையாக நடித்து இருந்தார். அதற்குப் பின் கடந்த 2008 இல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நடிகை ரோகிணியை காதலித்து 1996 இல் திருமணம் செய்து கொண்ட ரகுவரன் இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற ஒரு மகன் உள்ளார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வந்தார்கள். தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சாய் ரிஷிவரன் திரைப்பட வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்.
திரைத்துறையில் தனது அப்பா சாதித்தது போல் தானும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது பட வாய்ப்புகளை தேடி வருவது மட்டும் இல்லாமல் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். வாரிசு நடிகர்கள் வரிசையில் தற்போது ரகுவரன் மகனும் இணைந்துள்ளார்.
