8 வருட திருமண வாழ்க்கை!! மன உளைச்சளால் குடிப்பழக்கம்!! ரகுவரன் மரணத்திற்கு இதான் காரணம்
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லனாக திகழ்ந்து கணீர் குரலால் கட்டிப்போட்டவர் நடிகர் ரகுவரன். ஹீரோவாகவும் நடித்து வந்த ரகுவரன் ஒரு கட்டத்தில் வில்லனாகவும் குணச்சித்திர ரோலிலும் நடிக்க ஆரம்பித்தார்.
மார்க் ஆண்டனியாக புகழின் உச்சத்திற்கு சென்ற ரகுவரன் நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து சில வருடங்களுக்கு பின் விவாகரத்து பெற்று 2008ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் ரகுவரனின் சகோதரர் ரமேஷ் வரன் பல உண்மைகளை பகிர்ந்துள்ளார்.
மரணத்திற்கு முன் பல பிரச்சனைகளை ரகுவரன் சந்தித்ததாகவும், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடும் ஒருவகை அவரை மனஅழுத்ததிற்கு கொண்டு சென்றது. என்னதான் இருந்தாலும் சினிமான்னு வந்துட்டா எதிலும் விலகமாட்டார்.
அவரது மரணத்திற்கு காரணம் மது தான். குடிப்பழக்கத்ததை விட்டிருந்தார், பின் ஆரம்பித்து திரும்பவும் விட்டார். அதன்பின் உடல் பிரச்சனைக்கு பின் முழுவதும் விட்டுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு முன் எதனால் அதை ஆரம்பித்தார். தனிப்பட்ட பிரச்சனையாக இருக்கும் அது சொல்லமுடியாது என்றும் தெரிவித்திருக்கிறார் ரகுவரன் சகோதரர்.