24 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினி ஓகே!! கமல் ஹாசனை ஒதுக்கி வந்த நடிகர் ரகுவரன்..
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லனாக திகழ்ந்து கணீர் குரலால் கட்டிப்போட்டவர் நடிகர் ரகுவரன். ஹீரோவாகவும் நடித்து வந்த ரகுவரன் ஒரு கட்டத்தில் வில்லனாகவும் குணச்சித்திர ரோலிலும் நடிக்க ஆரம்பித்தார்.
மார்க் ஆண்டனியாக புகழின் உச்சத்திற்கு சென்ற ரகுவரன் நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து சில வருடங்களுக்கு பின் விவாகரத்து பெற்று 2008ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இந்நிலையில் ரகுவரனின் சகோதரர் ரமேஷ் வரன் பல உண்மைகளை பகிர்ந்துள்ளார். ரகுவரன், சினிமாவில் அறிமுகமாகியது முதல் மரணம் வரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் படத்தில் வில்லனாகவும் குணச்சித்திர ரோலிலும் நடித்து வந்திருக்கிறார்.
ஆனால் இதுவரை கமல் ஹாசன் படத்தில் மட்டும் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரகுவரனின் சகோதரர், கமல் சாரின் நாயகன் படத்தில் போலிஸ் ஆபிஸராக நடித்த நாசர் ரோலில் நடிக்க கமிட்டாகினார்.
அந்த ரோலிற்காக முடிவெட்ட வேண்டும் என்றும் வேறொரு படத்திற்காக ஹேர் ஸ்டைல் வைத்திருந்ததால் அதை வெட்ட முடியாமல் போக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதன்பின் இரு படங்களில் கமல் ஹாசன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். கமல் ரகுவரனின் நடிப்பை பார்த்து பாராட்டி நல்ல ஆர்ட்டிஸ்ட் என்றும் தெரிவித்திருக்கிறாராம். ரகுவரனும் கமல் ஹாசனும் இதுவரை ஒன்றாக இணைந்து புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.