பிரபல நடிகையை காதலித்து மன உளைச்சலுக்கு ஆளான ரகுவரன்.. அந்த நடிகை யார் தெரியுமா?
Raghuvaran
Amala
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக நடித்து அனைத்து தரப்பு மக்களை கவர்ந்தவர் நடிகர் ரகுவரன்.
இவர் நடிகை ரோகினியை 1996 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்
ரகுவரன் நடிப்பில் 1987 -ம் ஆண்டு கூட்டுப் புழுக்கள் என்ற வெளியானது . இதில் நடிகை அமலா கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படத்தின் போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவரின் காதலை அமலாவுடன் கூறியுள்ளார். அதற்கு அமலா மறுப்பு தெரிவித்ததால் ரகுவரன் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானராம். இது குறித்து அவரே பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து அமலா நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் 1993 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.