20 வயசு பையன்லாம் என்னை கலாய்க்கிறான்.. பாலா, மணிமேகலையால் கஷ்டப்பட்ட CWC பிரபலம்

Cooku with Comali Pugazh
By Edward Jul 30, 2022 07:15 AM GMT
Report

சினிமாவில் வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்து மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்று விளங்கியவர் ராகுல் தாத்தா. விஜய் சேதுபதி, நயன் தாரா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் ராகுல் தாத்தா.

எம்ஜிஆர் அவர்களின் அலுவலகத்தில் தயாரிப்பு துறையில் இருந்து பின் அடிமைப்பெண் படத்திலும் நடித்திருந்தார். எம்ஜிஆருடன் 15 படங்களும் சிவாஜி அவர்களுடன் 9 படத்திலும் நடித்துள்ள ராகுல் தாத்தா போகப்போக ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.

அவரை ரீஎண்ட்ரி கொடுத்து பிரபலப்படுத்தினார் விக்னேஷ் சிவன். 75 வயதாகும் அவர் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். கலகலப்பான நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் அவருடம் சேர்ந்து காமெடியில் கலக்கினார்.

தற்போது நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் மனது கஷ்டப்படும் படியாக யாராவது நடந்து கொண்டார்களா என்று கேட்கப்பட்டது.

ஆமாம் நடந்திருக்கு 20 வயசு பையன் நம்மள கலாய்க்கிறாங்களே என்று கஷ்டப்பட்டேன் என்றும் அதன்பின் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களாக மாறியதால் ரொம்ப சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.