சிகிச்சையால் முகம் மோசமாகி பழைய நிலைக்கு மாறிய பிக்பாஸ் நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் 4 வருடங்களாக ஒளிப்பரப்பாகி டிஆர்பியில் ஹிட்கொடுத்து வரும் பிக்பாஸ் முதல் சீசனில் அறிமுகமானவர் நடிகை ரைசா.
தனுஷின் விஐபி 2 படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் முகத்திற்கு அழகு சேர்க்க பியூட்டி பார்லர் மருத்துவரை அணுகி சிகிச்சை பார்த்துள்ளார். அதனால், சில நாட்களில் அவரின் முகம் வீங்கி பார்க்கும் படியாக இல்லாமல் போனது. இதுகுறித்து ரைசா வில்சன் புகாரளித்து நஷ்டயீடு கேட்டு வந்தார்.
பின் முகம் தற்போது சரியாகி இன்ஸ்டாகிராமில் மீண்டும் பழைய அழகு வந்துவிட்டது என்று புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
Long time no see ???? pic.twitter.com/Nznqr8cumg
— Raiza Wilson (@raizawilson) May 27, 2021