லிவ்விங் டுகெதர் எனக்கு ஓகே.. ஆனால்..? நடிகை ரைசாவின் அதிரடி முடிவு
முடிவு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை காஜலின் உதவியாளராக நடித்திருந்தவர் நடிகை ரைசா. இப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார்.
பிக் பாஸ் முடிந்த கையோடு, பியார் பிரேம காதல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார். ஆம், தற்போது இவர் கைவசம் ஆலிஸ், அப்.ஐ.ஆர், தி சேஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்கள் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் வீடியோ உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் " living together வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா? " என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, " லிவ்விங் டுகெதர் ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன் " என்று பதிலளித்துள்ளார்.