எவ்வளோ பெரிய மாஸ் சீண்டா இது! ராஜா ராணி சீரியல் காட்சியால் மன்னிப்பு கேட்கும் ராக்கி பாய்..
தமிழ்தொலைக்காட்சியில் விஜய் டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் முக்கிய சீரியலாக இருப்பது ராஜா ரானி 2. சித்து, ஆலியா மானசா முக்கிய கதாபாத்திரத்தில் ஆரம்பித்த சீரியல் டிஆர்பியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்து வருகிறது.
ஆலியா மானசா இரண்டாம் குழந்தை பிறப்பதற்காக சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதில் ரியா என்ற நடிகை அறிமுகமாகினார். ஆரம்பத்தில் இவர் செட்டாகுவாரா என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு அவரின் நடிப்பு பிடித்தமானதாக அமைந்து வருகிறது.
இந்நிலையில் சீரியலில் பார்வதி கல்யாண காட்சிகள் நடைபெற்று வருகிறது. பார்வதியை ஏற்கனவே காதலித்து வந்த விக்கியால் கல்யாணம் நின்று போகும் என் அர்ச்சனா எதிர்பார்த்திருந்தார்.
இதனால் பார்வதி, சந்தியா பயத்தில் இருக்க விக்கி பண்டபத்திற்கு வந்து கேஜிஎஃப் 2வில் ராக்கி பாய் செய்யும் சீனை அப்படி செய்துள்ளார். கையில் துப்பாக்கியை வைத்து சுடுவது போல் ராக்கியை போன்று விக்கி செய்துள்ள காட்சி தற்போது இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
எவ்வளவு பெரிய சீன் அதை இப்படி மொக்கையாக்கிட்டீங்களே என்று ராஜா ராணி சீரியலை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
— ً (@Cringedboy__) May 6, 2022