ராஜா சாப் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர்.. யார் தெரியுமா
இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த 9ஆம் தேதி வெளிவந்த படம் தி ராஜா சாப். இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரிதி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
மேலும் சஞ்சய் தத், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த பிரபாஸ் கிடையாது. முதலில் இப்படத்தின் கதையை நடிகர் நாணி-யிடம் இயக்குநர் மாருதி கூறியுள்ளார். ஆனால், இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நாணி.

அதன்பின் நடிகர் சூர்யாவிடம் இந்த கதையை கூற முயற்சி செய்துள்ளார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. அதன்பின்தான் இந்த கதையை பிரபாஸிடம் கூறி ஓகே செய்துள்ளார் இயக்குநர் மாருதி.