அட, இவ்வளவு சொத்து சேத்துட்டீங்களா நீங்க.. அடேங்கப்பா.. எல்லாம் பிரம்மாண்டம் தான்..

property value rajamouli
By Kathick Jan 11, 2022 09:15 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ராஜமௌலி. மாவீரன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான இவருக்கு, நான் ஈ திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று தந்தது.

தொடர்ந்து பல படங்களை இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் தனக்கென்று ஒரு இடத்தை சம்பாதித்தார். மேலும், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சாரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் எனும் பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இப்படம், கொரோனா காரணமாக தீடீரென தள்ளிப்போனது.

இந்நிலையில், இயக்குனர் ராஜமௌலியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 110 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், அடேங்கப்பா, இவ்வளவு சொத்து செத்துட்டாரா.. என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.