இது எப்பவும் நடக்காத காரியம்! பிரம்மாண்ட இயக்குனர் போட்ட பிளான்..

ajith vijay ramcharan rajamouli rrr
By Edward Jan 03, 2022 01:50 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பேர் பெற்றவர் இயக்குனர் ராஜமவுலி. மாவீரன், நான் ஈ படத்தின் வெற்றிக்கு பிறகு பாகுபலி என்ற மாபெரும் ஹிட் படத்தினை இயக்கினார். பிரபாஸ், ராணா டக்குபட்டி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யாராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கோடிக்கணக்கில் வசூல் மழையை அள்ளினார் ராஜமவுலி.

அப்படங்களுக்கு பிறகு நடிகர் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஆர் ஆர் ஆர். வருகிற பொங்கல் அன்று வெளியாக இருந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படத்தினை ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் பிரமோஷனுக்காக 5 மொழிகளிலும் படத்தின் ப்ரீ ரிலிஸ் விழாவை கொண்டாடி வந்தனர். அந்தவகையில் தமிழில் சென்னையில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

அந்நிகழ்ச்சிக்காக முதல் ராஜமவுலி அஜித், விஜய்யை ஒன்று சேர்த்து நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தாராம். அப்படி அஜித்தை அணுகி கால் செய்து பேசிய போது, இது செட்டாகாது என்று கன்னியமாகவும் அன்போடும் கூறியுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க விஜய்யை அணுகியதும் அவரே வரவில்லை நான் எப்படி சரிப்பட்டு வராது என்றும் அவரும் அன்போடு கூறியுள்ளார் இதன்பின் தான் சிவகார்த்திகேயனை அழைத்துள்ளார் ராஜமவுலி.