இதுல யாரும்மா கர்ப்பமா இருக்கீங்க! ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய ஆலியா மானசா..
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. முன்பெல்லாம் இல்லத்தரசிகளை மட்டும் ஈர்த்து வந்த சீரியல்கள் தற்போது அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கதையை எடுத்து ஒளிப்பரப்பு செய்கிறார்கள்.
அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. சித்து, ஆலியா மானாசா உள்ளிட்ட ஒருசில முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். வில்லியான விஜே அர்ச்சனா நடித்து வருகிறார். சந்தியாவுக்குன் அர்ச்சனாவிற்கு ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து ஓடும் இந்த சீரியலில் கர்ப்பமாக இருப்பதை பொய் கூறி குடும்பத்தை நம்ப வைத்து வரும் செய்தியை அறிந்த சந்தியா அர்ச்சனாவை மிரட்டுகிறார்.
அப்போது சந்தியாவாக நடிக்கும் ஆலியா உண்மையில் கர்ப்பமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இதை கவனித்த பலர் இதுல யாரும்மா கர்ப்பமா இருக்க சீரியலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறதே என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த மாத இறுதியில் ஆலியாவிற்கு குழந்தை பிறக்கவுள்ள நிலையில் சீரியலில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதில் தற்காலிகமாக ரியா என்ற நடிகை தற்காலிகமாக நடிக்கவுள்ளாராம். அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
