எம்.ஜி.ஆரின் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ராஜேந்திரா பிரசாத்.. மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ..

MGR M G Ramachandran
By Kathick Mar 13, 2026 12:15 PM GMT
Report

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் எம்.ஜி. ராமசந்திரன். அன்று முதல் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி பல விஷயங்களில் திரையுலக பிரபலங்கள் புகழ்ந்து பேசியுள்ளனர்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆரின் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ராஜேந்திரா பிரசாத்.. மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ.. | Rajendra Prasad Apology For Talk About Mgr

இதில், "மறைந்த தெலுங்கு நடிகர் காந்தாராவ் கத்தி சண்டையில் மிகவும் சிறந்தவர். அவருடைய திரைப்படங்கள் தமிழகத்தில் பெரிய வெற்றியடைந்துள்ளன. அவரை பார்த்த எம்.ஜி.ஆர் பயந்து நடுங்கி விடுவார்" என ராஜேந்திர பிரசாத் கூறியிருந்தார்.

இதையடுத்து, நடிகர் விஷால், நடிகர் நாசர் உள்ளிட்டோர் தமிழ் சினிமாவில் இருந்து ராஜேந்திர பிரசாத் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். தெலுங்கு திரையுலகில் இருந்து கூட பலரும், இப்படி பேசியது தவறு என கூறியிருந்தனர்.

எம்.ஜி.ஆரின் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ராஜேந்திரா பிரசாத்.. மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ.. | Rajendra Prasad Apology For Talk About Mgr

இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டு தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் வீடியோ வெளியிட்டுள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ: