எம்ஜிஆர் பற்றி ராஜேந்திர பிரசாத்தின் அவதூறு பேச்சு..நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்!! விஷால் கண்டனம்

MGR Vishal Gossip Today
By Edward Mar 12, 2026 07:30 AM GMT
Report

ராஜேந்திர பிரசாத்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் பற்றி தமிழ் சினிமா பிரபலங்கள் முதல் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் வரை புகழ்ந்து பேசுவார்கள்.

அப்படியிருக்கையில், சில தினங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், நிகழ்ச்சி ஒன்றில் அவதூறாகப் பேசியிருக்கிறார். இதற்கு பலரும் தங்களின் கடுமையான எதிர்ப்பை கூறி இருந்தும் அதற்கு இதுவரை அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

எம்ஜிஆர் பற்றி ராஜேந்திர பிரசாத்தின் அவதூறு பேச்சு..நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்!! விஷால் கண்டனம் | Rajendra Prasad Mgr Remarks Controversy Vishal

அதாவது, ஹைதராபாத்தில் நடந்த கலாப்பூர்ண காந்தாராவ் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராஜேந்திர பிரசாத். அப்போது பேசிய அவர், பழைய காலத் தெலுங்கு நடிகர் காந்தாராவைப் பற்றி பேசினார்.

அப்போது காந்தாராவ் நடித்த படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாகவும் அவரது திறமையை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார். அதே நேரத்தில் காந்தாராவை புகழ்ந்து பேசும்போது, அவரது படங்களை பார்த்து தமிழ் நடிகர் எம்ஜிஆர் கூட பயந்துபோய்விடுவார் என்று கூறியதாக தகவல் வெளியானது. இந்த கருத்து மிகவும் தமிழர்களால் கண்டனத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் நடிகர் விஷால், நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் பற்றி ராஜேந்திர பிரசாத்தின் அவதூறு பேச்சு..நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்!! விஷால் கண்டனம் | Rajendra Prasad Mgr Remarks Controversy Vishal

விஷால் கண்டனம்

அதில் விஷால், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் சமீபத்திய கருத்துக்களை பார்க்கும்போதும் கேட்கும்போத்ம் அதிர்ச்சியளிக்கிறது, வெறுப்பூட்டுகிறது.

காந்தாராவ் அவர்களை புகழ்ந்து பேசியிருந்தாலும், புகழ்பெற்ற நடிகர் எம்ஜிஆர் ஐயா அவர்களை இழிவுபடுத்தி குறைத்து மதிப்பிடுவது எங்கள் மக்களின் உணர்வுகளுக்கு சரியானதல்ல, அவர் இன்னும் என்றென்றும் நினைவு கூறப்படுபவர், நீங்கள் இந்த விஷயத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியதற்கு என் மன்னிப்பு.

ஏனென்றால் நான் ஒரு நடிகராக இருந்து, எதிர்காலத்தில் உங்கள் அளவிலான ஒரு நடிகரைப்பற்றி யாராவது தவறாக பேசினாலும் நானும் அதையே செய்வேன், நல்ல நம்பிக்கையுடன், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று விஷால் ஒரு பதிவினை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.