காசுக்கொடுத்து ஆபாசமாக திட்டச்சொல்லும் விஜய்!! ராஜேஸ்வரி பிரியா பகீர் புகார்..

Vijay Lokesh Kanagaraj Leo
By Edward Jul 06, 2023 10:48 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் நான் வரவா பாடல் இணையத்தில் சமீபத்தில் வெளியானது.

பாடலில் மது மற்றும் புகையிலை பிடிக்கச்சொல்லிய வார்த்தைகளும், விஜய் வாயில் சிகரெட் பிடிப்பது போன்றும் இருப்பதால், அதை எதிர்த்து ராஜேஸ்வரி பிரியா என்பவர் புகாரளித்திருந்தார். மேலும் விஜய்யை பற்றி அவதூறாக பேசியதாக விஜய் ரசிகர்கள் புகாரளித்திருந்தனர்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து விஜய்யை கைது செய்யக்கோரி டிஜிபி-யை பார்த்து மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜூன் 22 ஆம் தேதி லியோ பாடலில், புகைப்பிடித்தல் குறித்த டிஸ்க்ளைமர் வார்த்தைகளை போடவில்லை என்றும் பாடல் வரிகளை குறித்து பேட்டிக்கொடுத்திருந்தேன்.

விஜய் படம் படைத்த நபர் என்பதை நிரூபிக்க, டிவிட்டர் பக்கத்தில் பல போலிக்கணக்குகளை உருவாக்கி பணம் கொடுத்து நிறைய ஆபாச வசனங்கள், வார்த்தைகளால், வீடியோக்கள் கொச்சையான வார்த்தைகளை கூறி திட்ட வைத்துள்ளார்.

சாமானிய பெண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. வாங்கிய பணத்திற்காக ஐடி, ஃபேக் ஐடி நிருபிக்கிறது. ரஜினிகாந்தை குறித்தும் நான் பேசியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ராஜேஸ்வரி பிரியா. இதனால் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.