இதுவே தாங்க முடில இதுல இன்னொரு சீரியலா.. கடும் விரக்தியில் ரஜினி ரசிகர்கள்..

annaatthe rajinikanth soundarya rajinikanth production siruthaisiva
By Edward Nov 08, 2021 04:20 PM GMT
Report

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து கடந்த தீபாவளியன்று திரைக்கு வந்த படம் அண்ணாத்த. சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வழங்கிய இந்த படத்திற்கு இமான் இசை அமைத்திருந்தார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளிவந்த இந்த படம் 4 நாட்களில் 100 கோடியை கடந்து வசூல் ரீதியாக சாதனை படைத்திருக்கிறது. ஆனாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்றும் எதிர்மறை கருத்தும் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் ரஜினி சிவா கூட்டணி மீண்டும் இயக்கவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

நடிகர் சூர்யாவை அடுத்து இயக்க சிறுத்தை சிவா பேச்சு வார்த்தை நடத்தி வரும் சூழலில் அடுத்து சூப்பர் ஸ்டாருடன் இரண்டாவது முறையாக இணையவிருப்பதாகவும் இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தயாரிப்பார் என தெரியவந்துள்ளது. ஒரு சீரியலுக்கே இதுவரை தாங்க முடியல இதுல இரண்டாவது சீரியலா என்றும் போகுற வாக்குல ஹார்டிக் அடிப்பாரோ.