ஐஸ்வர்யாவுக்காக ரஜினி காலில் விழுந்த தனுஷ்? வைரலாகும் மீம்ஸ் வீடியோ

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Oct 07, 2022 04:55 AM GMT
Report

ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் காதல் தம்பதியினராக ஜொலித்து வந்தும் கணவரை வைத்து 3 படத்தினை இயக்கியும் வெற்றி கண்டார். திருமணமாகி யாத்ரா, லிங்கா என இரு மகன்களை பெற்று வாழ்ந்து வந்தனர்.

இப்படி சென்று கொண்டிருக்கும் போது ஜனவரி மாதம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அறிக்கை மூலம் தெரிவித்தனர். இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தியும் இரு மகன்களுடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டும் வந்தனர்.

ஐஸ்வர்யாவுக்காக ரஜினி காலில் விழுந்த தனுஷ்? வைரலாகும் மீம்ஸ் வீடியோ | Rajini Aishwarya Dhanush Divorce Memes Video Viral

இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெருங்கிய நண்பருடன் நெருக்கமாக இருப்பதால் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வைரலானது. இப்படியொரு செய்தி உலாவும் நிலையில், இருவரும் சந்தித்து பேசி ஒன்றாக சேர்ந்துவிடலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்களாம்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வீட்டில், இரு குடும்பத்தினரும் சந்தித்து மீட்டிங் வைத்திருக்கிறார்களாம். இதனால் விவாகரத்து முடிவில் இருந்து தற்போது பின் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை வைத்து நெட்டிசன்கள், சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா மாமனார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சியை மீம்ஸ் வீடியோவாக மாற்றி வைரலாக்கியுள்ளனர்.