கீர்த்தி சுரேஷ் வெச்ச இடமெல்லாம் கண்ணிவெடி தான்!! துண்டைப்போட்ட ரஜினி-சிரஞ்சீவி தயாரிப்பாளர்கள்..
தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அறிமுகமாகிய ஆரம்பத்தில் இருந்து ஒருசில படங்கள் தவிர அவர் நடிப்பில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்தது.
அதிலும் டாப் இடத்தில் இருந்த நடிகர்கள் படங்கள் பிளாப்பாகி கீர்த்திக்கு ராசியில்லா நடிகை என்ற பெயரையும் கொடுத்தது. அதிலும் ஹீரோயினாக நடித்து வராமல் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தும் மொக்கை வாங்கினார்.
அதை தொடர்ந்து அதை நிறுத்தாமல் தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் தங்கையாகவும் கமிட்டாகினார்.
அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் உருவாகி வெளியாகிய போலா சங்கர் படம் தற்போது வரை வெளியாகி 45 கோடிக்கும் மேல் மட்டுமே வசூலித்து பிளாப் படமாக அமைந்திருக்கிறது.
இதனால் கீர்த்தி சுரேஷ் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாகவே இருக்கிறது என்று பலர் கிண்டலடித்து வருகிறார்கள். சமீபத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் ஒரு படம் 200 நாட்கள் ஓடியகாலம் போய் 50 நாட்கள் ஓடினாலே பெரிய விசயமாகிவிட்டது என்று கூறியிருந்தார்.
இதில் கண்ணிவெடி என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.